ஓட்டப்பிடாரம் அருகேமோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி வாலிபர் பலி

ஓட்டப்பிடாரம் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி வாலிபர் பலியானார்.

Update: 2023-04-09 18:45 GMT

ஓட்டப்பிடாரம்:

ஓட்டப்பிடாரம் அருகே டயர் திடீரென்று வெடித்து சாலையில் தாறுமாறாக ஓடிய லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் வாலிபர் பரிதபமாக பலியானார்.

வாலிபர்

விளாத்திகுளம் அருகே ராமச்சந்திராபுரம் கிராமத்தை சேர்ந்த சந்தனராஜ் மகன் முனியசாமி (வயது 30). இவர் நேற்று முன்தினம் இரவு தூத்துக்குடியில் இருந்து குறுக்குச்சாலை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். குறுக்குசாலை அருகில் வந்தபோது, தூத்துக்குடியில் இருந்து சிவகாசி நோக்கி நிலக்கரி ஏற்றி சென்ற லாரி திடீரென டயர் வெடித்து நிலைத்தடுமாறி சாலையில் தாறுமாறாக ஓடியது. அந்த லாரி முனியசாமியின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட முனிசாமி பலத்த காயமடைந்தார்.

சாவு

அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில், ஓட்டப்பிடாரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராமன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு சாலையில் படுகாயத்துடன் கிடந்த முனிசாமியை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று காலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

டிரைவரிடம் விசாரணை

இந்த சம்பவம் குறித்து ஓட்டப்பிடாரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரான நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதி சேர்ந்த சங்கரன் (35) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்