ஓட்டப்பிடாரம் அருகே மாட்டு வண்டி பந்தயம்

ஓட்டப்பிடாரம் அருகே கோவில் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.

Update: 2022-07-30 11:40 GMT

ஓட்டப்பிடாரம்:

ஓட்டப்பிடாரம் அருகே உள்ள அக்கா நாயக்கன்பட்டி கிராமத்தில் பேச்சியம்மன் கோவில் கொடை விழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் புளியம்பட்டி- ஓட்டப்பிடாரம் சாலையில் நடந்தது. பெரிய மாடு, சிறிய மாடு ஆகிய 2 பிரிவுகளில் பந்தயம் நடைபெற்றது. பெரிய மாட்டு வண்டி பந்தயத்தில் 11 வண்டிகள் கலந்து கொண்டன. இதில் வேலாங்குளம் கண்ணன் வண்டி முதல் பரிசைத் தட்டிச் சென்றது. இரண்டாவது பரிசை சண்முகபுரம் விஜயகுமார் வண்டியும், மூன்றாவது பரிசை சக்கம்மாள்புரம் தாவீது வண்டியும் பெற்றன. சிறிய மாட்டு வண்டி பந்தயத்தில் 32 வண்டிகள் கலந்து கொண்டன. இப்பந்தயம் இரு சுற்றுகளாக நடத்தப்பட்டன. இதில் முதல் சுற்றில் 15 வண்டிகள் கலந்து கொண்டன. இதில் கடம்பூர் கருணாகரராஜா வண்டி முதல் பரிசை தட்டிச் சென்றது. இரண்டாவது பரிசை மஞ்சநாயக்கன்பட்டி பெருமாள் வண்டியும், மூன்றாவது பரிசை ஓட்டப்பிடாரம் கணேசன் வண்டியும் பெற்றன. இரண்டாவது சுற்றில் 17 வண்டிகள் கலந்து கொண்டன. முதல் பரிசு சண்முகபுரம் விஜயகுமார் வண்டிக்கும், இரண்டாவது பரிசை வள்ளியூர் ஆனந்த் வண்டிக்கும், மூன்றாவது பரிசு மேலமருதூர் முத்துப்பாண்டி வண்டிக்கும் கிடைத்தது.

Tags:    

மேலும் செய்திகள்