ஓட்டப்பிடாரம் அருகே கெபியில் மாதா சொரூபம் உடைப்பு

ஓட்டப்பிடாரம் அருகே கெபியில் மாதா சொரூபம் உடைப்பு தொடர்புடைய மர்மநபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

Update: 2023-07-26 18:45 GMT

ஓட்டப்பிடாரம்:

ஓட்டப்பிடாரம் அருகே கெபியில் மாதா சொரூபத்தை உடைத்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மாதா சொரூபம் உடைப்பு

ஓட்டப்பிடாரம் அருகே கொம்பாடி தளவாய்புரம்- நெல்லை சாலையில் வேளாங்கண்ணி மாதா கெபி உள்ளது. நேற்று முன்தினம் இரவில் இந்த கெபியின் பூட்டை உடைத்த மர்மநபர்கள், அங்கிருந்த மாதா சொரூபத்தை வெளியே எடுத்து உடைத்து போட்டு சென்றனர்.

நேற்று காலையில் இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்து, கெபியின் முன்பாக திரண்டனர். மாதா சொரூபத்தை சேதப்படுத்தியவர்களை கைது செய்ய வலியுறுத்தினர். இதுகுறித்து மணியாச்சி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீசார் விசாரணை

உடனே துணை போலீஸ் சூப்பிரண்டு லோகேஸ்வரன், இன்ஸ்பெக்டர் சுதந்திரதேவி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, மாதா சொரூபத்தை சேதப்படுத்தியவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

இதற்கிடையே கெபியில் திரண்டிருந்தவர்களிடம் போலீசார், அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அங்கிருந்தவர்கள் கலைந்து சென்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பும் இதே கெபியை உடைத்த மர்மநபர்கள் அங்கிருந்த உண்டியலை திருடிச் சென்றது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்