ஓட்டப்பிடாரம் அருகே காரில் புகையிலை பொருட்கள் கடத்திய 3 பேர் கைது

ஓட்டப்பிடாரம் அருகே காரில் புகையிலை பொருட்கள் கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-11-10 18:45 GMT

ஓட்டப்பிடாரம்:

ஓட்டப்பிடாரம் அருகே காரில் புகையிலை பொருட்கள் கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

போலீசார் சோதனை

ஓட்டப்பிடாரம் அருகே உள்ள பசுவந்தனையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த சென்னை பதிவெண் கொண்ட காரை போலீசார் தடுத்தி நிறுத்தி, அதில் இருந்த 3 பேரிடம் விசாரணை நடத்தினர்.

புகையிலை கடத்தல்

அந்த 3 பேரும் முன்னுக்கு பின் முரணாக தகவல் கூறினர். சந்தேகம் அடைந்த போலீசார் காரில் சோதனை நடத்தினர். அப்போது சாக்கு மூட்டையில் 1650 பாக்கெட் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது தெரிய வந்தது. அந்த புகையிலை பொருட்களை அவர்கள் கடத்தி சென்றதும் கண்டுபிடிக்கப்பட்டது.

3பேர் கைது

இதை தொடர்ந்து பசுவந்தனை போலீசார் வழக்குப்பதிவு செய்து, காரில் இருந்த சென்னை தி.நகரை சேர்ந்த முருகேசன் மகன் சதீஷ் (வயது 28), பசுவந்தனை சண்முகம்பிள்ளை மகன் லட்சுமணபெருமாள் (42), கிருஷ்ணசாமி மகன் அழகுராஜ் (35) ஆகியோரை கைது செய்தனர். புகையிலை பொருட்களுடன் காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்