நெல்லிக்குப்பம் அருகே வாலிபரை விரட்டி, விரட்டி தாக்கிய கும்பல்போலீசார் விசாரணை

நெல்லிக்குப்பம் அருகே வாலிபரை விரட்டி, விரட்டி தாக்கிய கும்பல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Update: 2023-01-07 18:45 GMT

நெல்லிக்குப்பம்,

நெல்லிக்குப்பம் அடுத்த அருங்குணம் குச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்த ஒரு இளம்பெண்ணிடம் நடுவீரப்பட்டு பெத்தாங்குப்பத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் அடிக்கடி பஸ்சில் சென்று வரும்போது, பேசிக்கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று காலையில் அந்த வாலிபர் அருங்குணம் குச்சிப்பாளையம் பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிள்களில் வந்த 10 பேர் கொண்ட கும்பல், அந்த வாலிபரை சுற்றி வளைத்து சரமாரியாக தாக்கினார்கள். இதையடுத்து அந்த வாலிபர், வானமாதேவி பாலம் வழியாக தப்பி ஓடினார். இருப்பினும் அந்த கும்பல், அவரை பின்தொடர்ந்து விரட்டி, விரட்டி கழி மற்றும் கட்டைகளால் சரமாரியாக தாக்கினர். இதைபார்த்த அங்கிருந்தவர்கள், விரட்டி சென்ற கும்பலை தடுத்து நிறுத்தி, இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணலாம் என்று தெரிவித்தனர். அதற்குள் அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். பின்னர் அந்த கும்பலும் அங்கிருந்து சென்றனர். வாலிபரை தாக்கியவர்கள் யார், தாக்குதலுக்கான காரணம் குறித்து நெல்லிக்குப்பம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்