நாசரேத் அருகேகிணற்றில் தவறி விழுந்த வெள்ளைநிற மயில் மீட்பு

நாசரேத் அருகே கிணற்றில் தவறி விழுந்த வெள்ளைநிற மயில் மீட்கப்பட்டது.

Update: 2023-09-15 18:45 GMT

நாசரேத்:

நாசரேத் அருகே உள்ள மூக்குப்பீறி அரசு அரம்ப சுகாதார நிலையம் பின்புறம் உள்ள 40 அடி ஆழமுள்ள கிணற்றில் அரியவகை வெள்ளைநிற மயில் ஒன்று தவறி விழுந்து தத்தளித்து கொண்டிருந்தது. இதுகுறித்து தகவல் கிடைத்தவுடன் ஸ்ரீவைகுண்டம் தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) மந்திரமூர்த்தி தலைமையில் வீரர்கள் அரிகரபாலன், சங்கர், ராமச்சந்திரன், பழனி, மணிகண்டன் ஆகியோர் விரைந்து சென்று கிணற்றில் இறங்கி வெள்ளை மயிலை உயிருடன் மீட்டு பாதுகாப்புடன் வனப்பகுதியில் விட்டனர். அரிதாக காணப்படும் வெள்ளை நிற மயிலை சுற்றுவட்டார பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்து சென்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்