நாலாட்டின்புத்தூர் அருகே கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி பலி

நாலாட்டின்புத்தூர் அருகே கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி பலியானார்.

Update: 2022-11-28 18:45 GMT

நாலாட்டின்புத்தூர்:

நாலாட்டின்புத்தூர் அருகிலுள்ள சத்திரப்பட்டியை ேசர்ந்தவர் கணபதியம்மாள் (வயது 65). இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று அந்த பகுதியில் உள்ள கிணற்றில் தவறி விழுந்த அவர் பரிதாபமாக இறந்து போனார். இதுகுறித்த தகவலின் பேரில் நாலாட்டின்புத்தூர் போலீசார் அந்த பகுதிக்கு விரைந்து சென்று, கிணற்றில் கிடந்த அந்த மூதாட்டி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலம் இது குறித்து நாலாட்டின்புத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்