கடலூர் முதுநகர் அருகே இரும்பு பொருட்கள் திருடிய 2 பேர் கைது

கடலூர் முதுநகர் அருகே இரும்பு பொருட்கள் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-11-13 18:45 GMT

கடலூர் முதுநகர்,

கடலூர் முதுநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜாங்கம் தலைமையிலான போலீசார், சுத்துக்குளம் பகுதியில் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சிதம்பரத்தில் இருந்து கடலூர் நோக்கி வந்த மினி லாரியை போலீசார் மறித்தனர். அப்போது மினிலாரியை நிறுத்தியதும் அதில் இருந்த 2 பேர், தப்பி ஓடினர். இதைத்தொடர்ந்து மேலும் மினிலாரியில் இருந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த ஜெய்சங்கர் (வயது 38), ஜெயபிரகாஷ் (27) என்பதும், தப்பி ஓடியவர்கள் சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த நாகராஜ் (38), அருள்தாஸ் (40) என்பதும் தெரியவந்தது. இவர்கள் 4 பேரும் சேர்ந்து புதுச்சத்திரம் அருகே தனியார் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் இருந்து 2 ஆயிரம் கிலோ எடை உள்ள பழைய இரும்பு பொருட்களை திருடி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து ஜெய்சங்கர், ஜெயபிரகாஷ் ஆகிய 2 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்த இரும்பு பொருட்கள் மற்றும் மினி லாரியையும் பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய நாகராஜ், அருள்தாஸ் ஆகிய 2 பேரையும் தேடி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்