முள்ளக்காடு அருகே விபத்தில் 3 வாலிபர்கள் படுகாயம்

முள்ளக்காடு அருகே விபத்தில் 3 வாலிபர்கள் படுகாயம் அடைந்தனர்.

Update: 2023-07-14 18:45 GMT

ஸ்பிக்நகர்:

ஏரல் அருகேயுள்ள மஞ்சள்நீர்காயல் பகுதியை சேர்ந்தவர் வைரகனி. இவரது மகன் வரதராஜன் (வயது23). கூலி தொழிலாளி. இவரும், நண்பர்களான மஞ்சள்நீர்காயல் பகுதியை சேர்ந்த வேல்முருகன் மகன் கலிங்கர் (18), தாளமுத்துநகர் கோவில்பிள்ளைவிளையை சேர்ந்த சங்கரன் மகன் சுடலை லெனின் (20) ஆகியோரும் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தனர். முள்ளக்காடு அருகே உள்ள தனியார் உப்பு கம்பெனி அருகே சென்றபோது, எதிரே வந்த கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் 3 பேரும் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தனர். அக்கம்பக்கத்தினர் இந்த 3 பேரையும் மீட்டு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் முத்தையாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்