மொடக்குறிச்சி அருகே லாரி- சரக்கு வேன் மோதல்; டிரைவர் பலி

மொடக்குறிச்சி அருகே லாரி, சரக்கு வேன் மோதிக்கொண்ட விபத்தில் டிரைவர் பலி ஆனார்.

Update: 2022-10-13 21:16 GMT

மொடக்குறிச்சி

மொடக்குறிச்சி அருகே லாரி, சரக்கு வேன் மோதிக்கொண்ட விபத்தில் டிரைவர் பலி ஆனார்.

டிரைவர்

கொடுமுடியை அடுத்த பாசூர் அருகே உள்ள செங்கோடம்பாளையத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவருடைய மகன் கதிர்வேல் (வயது 26). திருமணம் ஆகவில்லை. பால் எடுத்து செல்லும் சரக்கு வேனில் டிரைவராக வேலை செய்து வந்தார். இவர் தினமும் கொடுமுடியை அடுத்த கருமாண்டம்பாளையத்தில் இருந்து ஈரோட்டுக்கு வந்து அங்குள்ள தனியார் பால் பண்ணையில் இருந்து பால் பாக்கெட்டுகளை எடுத்து சரக்கு வேனில் கொண்டு சென்று மொடக்குறிச்சி பகுதியில் வினியோகம் செய்யும் வேலை செய்து வந்தார்.

சாவு

இதற்காக வழக்கம்போல் நேற்று அதிகாலை கருமாண்டம்பாளையத்தில் இருந்து ஈரோட்டுக்கு சரக்கு வேனை ஓட்டி வந்தார். மொடக்குறிச்சியை அடுத்த லக்காபுரம் அருகே உள்ள சோலார் புதூர் பக்கம் சென்றுகொண்டிருந்தபோது, எதிரே சிமெண்டு பாரம் ஏற்றி வந்த லாரியும், சரக்கு வேனும் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் சரக்கு வேன் உருண்டு சாக்கடை கால்வாய் பகுதியில் விழுந்தது. இதில் சம்பவ இடத்திலேயே வாகன இடிபாடுகளுக்குள் சிக்கி சரக்கு வேன் டிரைவர் கதிர்வேல் பரிதாபமாக இறந்தார். மேலும் இந்த விபத்தில் லாரியை ஓட்டி வந்த திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை சேர்ந்த வீரபத்திரனுக்கு (40), லேசான காயம் ஏற்பட்டது.

இதுபற்றி அறிந்ததும் மொடக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விபத்தில் இறந்த கதிர்வேலுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்