குரும்பூர் அருகேதொழிலாளிக்கு அரிவாள் வெட்டு

குரும்பூர் அருகே தொழிலாளிக்கு அரிவாள் வெட்டிய நண்பரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-12-27 18:45 GMT

தென்திருப்பேரை:

குரும்பூர் அருகே உள்ள அழகப்பப்புரத்தை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 50). கூலி தொழிலாளி. இவருடைய நண்பர் தூத்துக்குடி அண்ணா நகரை சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் முத்துக்குமார் என்ற மதுரை முத்து (32). இவர் கடந்த 6 மாதங்களாக குரும்பூரில் வீடு எடுத்து தங்கி வருகிறார். இவர்கள் இருவரும் நண்பர்கள்.

கடந்த சில நாட்களாக மாரியப்பன், முத்துக்குமார் மனைவியிடம் அடிக்கடி தண்ணீர் வாங்கி குடித்ததாக தெரிகிறது. இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த இரு நாட்களுக்கு முன்பு இரவு நண்பர்கள் இருவரும் ஒன்றாக மது அருந்திவிட்டு வந்துள்ளனர். அப்போது அவர்கள் இருவருக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தனது வீட்டின் அருகே நடந்து வந்த மாரியப்பனை, முத்துக்குமார் அரிவாளால் வெட்டியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த மாரியப்பன், திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் குரும்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் விசாரணை நடத்தி முத்துக்குமாரை கைது செய்தார். முத்துக்குமார் மீது மாவட்டத்தில் பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்