குமராட்சி அருகே சுவர் இடிந்து விழுந்து படுகாயமடைந்த பெண் சாவு

குமராட்சி அருகே சுவர் இடிந்து விழுந்ததில் படுகாயமடைந்த பெண் உயிாிழந்தாா்.;

Update: 2022-11-18 18:45 GMT

காட்டுமன்னார்கோவில், 

குமராட்சி ஒன்றியம் கொத்தங்குடி கிழக்கு தெருவை சேர்ந்தவர் சோமசுந்தரம்(வயது 50). சம்பவத்தன்று இவர் தனது மனைவி நிர்மலா(45), மகன்கள் அய்யப்பன்(22), மணிகண்டன்(22), சோமசுந்தரத்தின் தம்பி சுரேஷ்(45) ஆகியோருடன் கூரை வீட்டில் படுத்து தூங்கினார். இந்த நிலையில் அப்பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக திடீரென வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. இதில் சோமசுந்தரம், நிர்மலா ஆகியோர் பலத்த காயமடைந்தனர். இவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நிர்மலா பரிதாபமாக உயிரிழந்தார். சோமசுந்தரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து புத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்