குலசேகரன்பட்டினம் அருகே மீனவர் தூக்கு போட்டு தற்கொலை

குலசேகரன்பட்டினம் அருகே மீனவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-10-21 18:45 GMT

குலசேகரன்பட்டினம்:

குலசேகரன்பட்டின் அருகே மது குடிப்பதை மனைவி கண்டித்ததால் மனமுடைந்த மீனவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

மீனவர்

குலசேகரன்பட்டினம் அருகேயுள்ள கல்லாமொழி புதுவைநகரை சேர்ந்த வேதம் மகன் ஜான் சேவியர் (வயது 43). மீனவர். இவர் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இவருக்கு பிரிஸ்கா மேரி என்ற மனைவியும், 3 பெண் குழந்தைகள் உள்ளனர். ஜான் சேவியர் தினமும் குடித்துவிட்டு வந்து வீட்டில் குடும்பத்தினருடன் பிரச்சினை செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்துள்ளார். இதை பிரிஸ்காமேரி கண்டித்து வந்துள்ளார். இதனால் அடிக்கடி கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

தற்கொலை

இந்த நிலையில் கடந்த 18-ந் தேதி இரவு வழக்கம் போல் ஜான் சேவியர் மது அருந்தி விட்டு வீட்டுக்கு வந்துள்ளார். இதை மனைவி கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த அவர் வீட்டிற்கு வெளியே படுத்துள்ளார். நள்ளிரவில் ஏணிப்படி கம்பியில் தூக்கு போட்டு தொங்கியுள்ளார். அதிகாலையில் இதை பார்த்த குடும்பத்தினர் பதறிப்போய், அவரை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இதுகுறித்து குலசேகரன்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) கனகாபாய், சப்-இன்ஸ்பெக்டர் முனியாண்டி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்