கோவில்பட்டி அருகே ரெயிலில் அடிபட்டு ஒருவர் பலி

கோவில்பட்டி அருகே ரெயிலில் அடிபட்டு ஒருவர் பலியானார்.

Update: 2022-11-25 18:45 GMT

கோவில்பட்டி:

கோவில்பட்டி ரெயில் நிலையத்திற்கும், நள்ளி ரெயில் நிலையத்திற்கும் இடையே தோட்டிலோவன்பட்டி கிராமம் அருகில் தண்டவாளத்தில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கிடப்பதாக, தூத்துக்குடி ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகா கிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணமாக கிடந்தவரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். பிணமாக கிடந்தவருக்கு 40 வயது இருக்கும். கருப்பு நிறம், தாடி வைத்துள்ளார். பச்சை நிறத்தில் கட்டம் போட்ட கைலியும், கருப்பு வெள்ளை கலரில் துண்டும் அணிந்துள்ளார். அவர் யார?் எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் உடனடிாக தெரியவில்லை. பிரேத பரிசோதனைக்காக அவரது உடலை போலீசார் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தூத்துக்குடி ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் யார்? இறந்தது எப்படி? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்