கோவில்பட்டி அருகே எழுத்தாளர் கி.ரா.நினைவு மண்டபத்துக்கு அடிக்கல் நாட்டுவிழா

கோவில்பட்டி அருகே எழுத்தாளர் கி.ரா.நினைவு மண்டபத்துக்கு அடிக்கல் நாட்டுவிழா நடந்தது. ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மணிமண்டபத்துக்கு அடிக்கல் நாட்டினார்.

Update: 2022-09-20 18:45 GMT

கோவில்பட்டி:

கோவில்பட்டி அருகே உள்ள இடைசெவல் கிராமத்தைச் சேர்ந்த சாகித்திய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் கி. ராஜநாராயணன் நூற்றாண்டு விழா மற்றும் நினைவு மண்டப அடிக்கல் நாட்டு விழா கே. ராஜநாராயணன் குடும்பத்தினர், வாசகர்கள், மற்றும் இடைசெவல் கிராம பொதுமக்கள் சார்பில் நடந்தது.

நிகழ்ச்சியில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். இதில் எழுத்தாளர் ராஜநாராயணன் மகன் கி. ரா. பிரபி, குடும்பத்தினர், மதிமுக துணைப் பொதுச் செயலாளர் தி.மு. ராஜேந்திரன், மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ரமேஷ், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் விநாயக ரமேஷ், கோவில்பட்டி நகர சபை தலைவர் கா.கருணாநிதி, பஞ்சாயத்து யூனியன் தலைவர் கஸ்தூரி சுப்புராஜ், ம.தி.மு.க. செயலாளர் பவுன் மாரியப்பன், நகர செயலாளர் பால்ராஜ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.

இதனை தொடர்ந்து வைகோ கூறுகையில், இந்த நினைவு மண்டபத்திற்கு எனது சார்பில் ரூ.1 லட்சம் நன்கொடை தருகிறேன் என்றார். கி.ரா. பிரபி நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்