கோவில்பட்டி அருகேராணுவ வீரர் வீட்டில் திருட்டு

கோவில்பட்டி அருகே ராணுவ வீரர் வீட்டில் திருட்டு தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Update: 2023-05-15 18:45 GMT

கோவில்பட்டி:

கோவில்பட்டியை அடுத்துள்ள அய்யனேரி கிருஷ்ணன் கோவில் தெருவைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் கோபால்சாமி (வயது 63). இவரது மனைவி சந்திரா. இருவரும் கடந்த 7-ந்தேதி ராமநாதபுரத்தில் உள்ள மகன் வீட்டிற்கு சென்றுவிட்டு நேற்று முன்தினம் இரவு வீட்டிற்கு திரும்பினார்கள். அப்போது வீட்டின் பூட்டு மற்றும் கதவு உடைக்கப்பட்ட நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 3 பவுன் தங்க மோதிரங்கள், தங்க டாலர், தங்க காது வளையம், தங்க கம்மல் மற்றும் ரொக்கப்பணம் ரூ.4 ஆயிரம் திருடு போயிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில்,மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து, வீட்டின் பூட்டை உடைத்து திருடி சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்