கோவில்பட்டி அருகே800 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

கோவில்பட்டி அருகே 800 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2023-04-20 18:45 GMT

தூத்துக்குடி குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாரத்லிங்கம் தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செந்தட்டி அய்யன், ஏட்டு கந்தசுப்பிரமணியன் ஆகியோர் தூத்துக்குடி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் தாப்பாத்தி அகதிகள் முகாம் அருகே திடீர் வாகன தணிக்கை செய்தனர். அப்போது அங்கு வந்த ஒரு காரை வழிமறித்து சோதனை செய்தனர். அந்த காரில் தலா 40 கிலோ எடை கொண்ட 20 மூட்கைளில் மொத்தம் 800 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக போலீசார் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து தூத்துக்குடி குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து ரேஷன் அரிசி கடத்தியதாக கோவில்பட்டி செண்பகவல்லி நகரை சேர்ந்த கருப்பசாமி மகன் கார்த்திக் ராஜா (வயது 27), பண்ணைத் தோட்ட தெருவை சேர்ந்த பரமசிவம் மகன் மாரிசெல்வம் (25), பூர்ணம்மாள் காலனியை சேர்ந்த சேர்மகனி மகன் சுந்தர் (20) ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோழிப்பண்ணைகளில் அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக கொண்டு சென்றது தெரியவந்தது. தொடர்ந்து 800 கிலோ ரேஷன் அரிசி மற்றும் காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்