கோபி அருகே கோவில் உண்டியலை உடைத்து திருட முயற்சி: 3 பேர் கைது

கோபி அருகே கோவில் உண்டியலை உடைத்து திருட முயன்ற 3 பேர் கைது செய்யப்பட்டனா்.;

Update: 2023-06-02 21:32 GMT

கோபி அருகே தாழ்குனி கிராமத்தில் ஏரி முனியப்பன் கோவில் உள்ளது. இதனை சுத்தப்படுத்துவதற்காக நேற்று முன்தினம் இரவு கோவிலின் பொறுப்பாளரான சரவணன் (வயது 53) என்பவர் வந்தார். அப்போது அங்கு வைக்கப்பட்டிருந்த உண்டியலை 3 பேர் உடைக்க முயன்று கொண்டிருந்ததை பார்த்தார். சரவணனை கண்டதும் 3 பேரும் அங்கிருந்து காரில் தப்பி சென்றுவிட்டனர்.

இதுபற்றி சிறுவலூர் போலீசில் சரவணன் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் கோவில் உண்டியலை உடைத்து திருட முயன்றவர்கள் தாழ்குனியைச் சேர்ந்த அசோக் குமார் (வயது 32), விஜயகுமார் (28), வைபவன் (21) ஆகியோர் என்பது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்