கோபி அருகே கிணற்றில் தவறி விழுந்த புள்ளி மான் உயிருடன் மீட்பு
புள்ளி மான்
கவுந்தப்பாடி அருகே உள்ள கூத்தாடிபாளையத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியம் (வயது 55). விவசாயி. இவருடைய தோட்டத்தில் 50 அடி ஆழ கிணறு ஒன்று உள்ளது. இதில் 40 அடிக்கு தண்ணீர் உள்ளது. இந்த நிலையில் வனப்பகுதியை விட்டு வெளியேறிய புள்ளிமான் ஒன்று சுப்பிரமணியத்தின் கிணற்றில் தவறி விழுந்தது. இதுபற்றி அறிந்ததும் கோபி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தண்ணீரில் தத்தளித்த புள்ளிமானை உயிருடன் மீட்டனர். மீட்கப்பட்ட புள்ளிமான் டி.என்.பாளையம் வனத்துைறயினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து வனத்துறையினர் புள்ளிமானை டி.என்பாளையம் வனப்பகுதிக்கு கொண்டு சென்று விட்டனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், 'கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட புள்ளிமான் 5 வயதுடைய புள்ளிமான் ஆகும். தண்ணீர் தேடி வந்தபோது கிணற்றில் தவறி விழுந்து இருக்கலாம்,' என தெரிவித்தனர்.