கன்னியாகுமரி அருகேநடுக்கடலில் தவறி விழுந்த மீனவர் மாயம்

கன்னியாகுமரி அருகே நடுக்கடலில் தவறி விழுந்த மீனவர் மாயமானார். அவரை தேடிவருகின்றனர்.

Update: 2023-02-22 18:45 GMT

தூத்துக்குடி அருகே உள்ள தருவைகுளத்தை சேர்ந்தவர் மைக்கேல் பாக்கிய ரிக்சன் (வயது 34). இவர் தனது சகோதரர் அந்தோணி அமல்ராஜ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் கடந்த 7-ந் தேதி 11 பேருடன் மீன்பிடிக்க சென்றார். அவர்கள் கடந்த 13-ந் தேதி தருவைகுளத்தில் இருந்து 450 கடல்மைல் தொலைவில் கன்னியாகுமரி கடற்கரைக்கு தெற்கே மீன்பிடித்துக் கொண்டு இருந்தார்களாம். அப்போது எதிர்பாராதவிதமாக மைக்கேல் பாக்கிய ரிக்சன் தவறி கடலில் விழுந்து விட்டாராம். இதனால் அவரை மற்ற மீனவர்கள் தேடிப்பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதைத் தொடர்ந்து தருவைகுளம் கடலோர பாதுகாப்பு போலீசில் புகார் தெரிவித்து உள்ளனர். அதன்பேரில் கடலோர பாதுகாப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்