கடமலைக்குண்டு அருகேலாரியில் கடத்தி வந்த 60 கிலோ கஞ்சா பறிமுதல்:2 பேர் கைது

கடமலைக்குண்டு அருகே லாரியில் கடத்தி வந்த 60 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-01-24 18:45 GMT

கடமலைக்குண்டு போலீசார் நேற்று முன்தினம் இரவு அய்யனார்புரம் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது கண்டமனூர் பகுதியில் இருந்து கடமலைக்குண்டு நோக்கி மீன் பெட்டிகளை ஏற்றி வந்த லாரியை நிறுத்தி போலீசார் சோதனை நடத்தினர். அதில் மீன் பெட்டிகளுக்கு இடையே தலா 2 கிலோ எடை கொண்ட 30 பொட்டலங்களில் 60 கிலோ கஞ்சா மறைத்து வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து போலீசார் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பின்னர் லாரியில் வந்தவர்களிடம் விசாரணை நடத்தியதில், அவர்கள் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த டிரைவர் ராஜா (வயது 32), சிங்கராஜபுரத்தை சேர்ந்த நல்லமலை (35) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கஞ்சா எங்கிருந்து கடத்தி வரப்பட்டது, இதில் வேறு யாருக்கும் தொடர்பு இருக்கிறதா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்