கோபி அருகேசரக்கு வேனில் கடத்தப்பட்ட 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்;டிரைவர் கைது

கோபி அருகே சரக்கு வேனில் கடத்தப்பட்ட 1 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்ததுடன், டிரைவரையும் கைது செய்தனர்.

Update: 2023-01-01 20:59 GMT

டி.என்.பாளையம்

கோபி அருகே சரக்கு வேனில் கடத்தப்பட்ட 1 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்ததுடன், டிரைவரையும் கைது செய்தனர்.

ரகசிய தகவல்

கோபியை அடுத்த டி.என்.பாளையம் அருகே உள்ள கணக்கம்பாளையம் சின்னகாளியூர் வேதபாறை பள்ளம் அருகே ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக பங்களாப்புதூர் போலீசாருக்கு நேற்று முன்தினம் இரவு ரகசிய தகவல் கிடைத்தது.

தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வேனை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர்.

கைது- பறிமுதல்

சோதனையின்போது சரக்கு வேனில் 22 மூட்டைகளில் 1 டன் ரேஷன் அரிசி இருந்ததை போலீசார் கண்டனர். உடனே சரக்கு வேனை ஓட்டி வந்தவரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், 'அவர் பவானி அருகே உள்ள மேட்டுநாசுவம்பாளையத்தை சேர்ந்த வெங்கடேஷ் (வயது 40) என்பதும், ரேஷன் அரிசியை கடத்தி சென்றதும்,' தெரியவந்தது. இதைத்தொடர்ந்து வெங்கடேசை போலீசார் கைது செய்ததுடன், 1 டன் ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சரக்கு வேனையும் பறிமுதல் செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட வெங்கடேஷ், பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி மற்றும் சரக்கு வேனை, ஈரோடு உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம், பங்களாப்புதூர் போலீசார் ஒப்படைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்