கயத்தாறு அருகேமழை சேதத்தை கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. ஆய்வு

கயத்தாறு அருகே மழை சேதத்தை கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.

Update: 2023-06-01 18:45 GMT

கயத்தாறு:

கயத்தாறு அருகேயுள்ள திருமலாபுரம் பஞ்சாயத்து பகுதியில் நேற்று முன்தினம் மாலையில் பலத்த சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதில் அதே ஊரை சேர்ந்த விவசாயி சுப்புராஜ் என்பவரது தோட்டத்தில் மூன்று ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டு இருந்த பப்பாளி மரங்களும், அதே பகுதியில் கனகராஜ் என்ற விவசாயின் தோட்டத்தில் பயிரிடப்பட்டு இருந்த நாட்டு கொய்யா மரங்கள் வேரோடு சாய்ந்து வீணாகி விட்டன. இதில் அவர்களுக்கு பலலட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. அந்த தோட்டங்களுக்கு சென்று பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்தார். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அவர் ஆறுதல் கூறினார். அந்த விவசாயிகளுக்கு அரசு நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க உறுதி அளித்தார். அவருடன் தூத்துக்குடி வடக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் செல்வகுமார், இணைச்செயலாளர் நீலகண்டன், ஒன்றிய மாணவ அணி செயலாளர் நவநீதகிருஷ்ணன் ஆகியோர் உடன் சென்றிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்