கயத்தாறு அருகே அரசு பஸ் கண்ணாடி உடைப்பு

கயத்தாறு அருகே அரசு பஸ் கண்ணாடி உடைக்கப்பட்டது.;

Update: 2023-07-09 18:45 GMT

கயத்தாறு:

கங்கைகொண்டான் ராஜபதியை சேர்ந்தவர் சுடலைமுத்து(வயது62). விவசாய கூலித்தொழிலாளி. இவர் நேற்றுகாலையில் ராஜாபுதுக்குடி பகுதியில் சாலைஓரத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த 55 வயதுடைய மனநிலை பாதித்த பெண் வந்துள்ளார். அவர் திடீரென்று கற்களை எடுத்து சுடலைமுத்து மீது எரிந்தாராம். இதில் ஆத்திரமடைந்த சுடலைமுத்துவும் சாலையில் கிடந்த கற்களை எடுத்து அந்த பெண் மீது வீசியுள்ளார். இருவரும் மாறிமாறி கற்களை வீசிக் கொண்டிருந்தேபாது, அந்த வழியாக கயத்தாறு அருகிலுள்ள நடந்தான்குளம் கிராமத்திற்கு நெல்லையிலிருந்து அரசு டவுன் பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது. இவர்கள் வீசி கற்கள் பஸ்சின் முன்பக்க கண்ணாடியில் பட்டு சேதமடைந்தது. இதில் அதிர்ச்சி அடைந்த டிரைவர் பெருமாள் உடனடியாக பஸ்சை நிறுத்தினர். பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் கயத்தாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். பின்னர் இதுதொடர்பாக கயத்தாறு போலீசார் சுடலைமுத்துவை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்