கயத்தாறு அருகே400 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

கயத்தாறு அருகே 400 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக வாலிபர் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2022-12-26 18:45 GMT

தூத்துக்குடி குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் கே.கோட்டைச்சாமி தலைமையிலான போலீசார் கயத்தாறு அருகே உள்ள ஓனமாக்குளம் தெற்கு தெருவில் திடீர் சோதனை நடத்தினர். அந்த பகுதியில் உள்ள சிலை அருகே தலா 50 கிலோ எடை கொண்ட 8 மூட்டைகளில் 400 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது. உடனடியாக போலீசார் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து தூத்துக்குடி குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை போலீசார் வழக்கு பதிவு செய்து, கயத்தாறு தாலுகா வி.பி.தாழையூத்தை சேர்ந்த காளிமுத்து (வயது 35) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து மோட்டார் சைக்கிள் மற்றும் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்