கள்ளிப்பட்டி அருகேவாய்க்காலில் தவறி விழுந்து தொழிலாளி சாவு

கள்ளிப்பட்டி அருகே வாய்க்காலில் தவறி விழுந்து தொழிலாளி இறந்தாா்

Update: 2023-05-13 21:19 GMT

டி.என்.பாளையம் கள்ளிப்பட்டி அருகே உள்ள கணக்கம்பாளையம் பகவதி நகர் ராமசாமி தோட்டம் பகுதியை சேர்ந்தவர் சென்னியப்பன் (வயது 65). இவருக்கு சாந்தி என்ற மனைவி உள்ளார். சென்னியப்பன் தேங்காய் பொறுக்கும் கூலி வேலை செய்து வந்துள்ளார். மது குடிக்கும் பழக்கம் உண்டு.

இந்த நிலையில் எரங்காட்டூர் அருகே வேலைக்கு சென்ற சென்னியப்பன் அரக்கன்கோட்டை ஆயக்கட்டு பாசன வாய்க்காலில் தவறி விழுந்து கிடந்தார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் சென்னியப்பனை மீட்டு சிகிச்சைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்துவிட்டு சென்னியப்பன் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து பங்களாப்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, சென்னியப்பன் கீழே விழுந்த தேங்காய்களை எடுத்து கொண்டு இருந்த போது தோட்டத்தின் கரையோரத்தில் இருந்த வாய்க்காலில் தவறி விழுந்து இறந்தரா? அல்லது மதுபோதையில் வாய்க்காலில் தவறி விழுந்து இறந்தாரா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்