எட்டயபுரம் அருகே வேப்ப மரத்தில் பால் வடிந்தது

எட்டயபுரம் அருகே பால் வடிந்த வேப்ப மரத்திற்கு பூஜை செய்து பொதுமக்கள் வழிபட்டனர்.;

Update: 2022-11-04 18:45 GMT

எட்டயபுரம்:

எட்டயபுரம் அருகே உள்ள மேலப்பட்டி கிராமத்தில், நடராஜன் என்பவருக்கு சொந்தமான வேப்ப மரத்தில் கடந்த 3 நாட்களாக பால் போன்ற திரவம் வந்துள்ளது. இதனை அறிந்ததும் அப்பகுதி மக்கள் மிகுந்த ஆர்வமுடன் கூட்டம் கூட்டமாக சென்று வேப்ப மரத்தில் இருந்து பால் வடிவதை வியப்புடன் கண்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று அந்த வேப்ப மரத்திற்கு மஞ்சள் பூசி சந்தனம், குங்குமம் இட்டு தீபாராதனை காட்டி அக்கிராம மக்கள் பூஜை செய்து வழிபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்