எட்டயபுரம் அருகே கோவில் கும்பாபிஷேக விழா தொடக்கம்
எட்டயபுரம் அருகே கோவில் கும்பாபிஷேக விழா யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.
எட்டயபுரம்:
எட்டயபுரம் அருகே படர்ந்தபுளி கிராமத்தில் இந்து நாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட பத்திரகாளி அம்மன், பேச்சி அம்மன், செல்வ விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேக விழா நேற்று யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. இதை முன்னிட்டு காலையில் அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி பூஜை நடந்தது. விழாவில் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். இதில் விளாத்திகுளம் தி.மு.க மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் இமானுவேல், மகேந்திரன் உள்பட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.