எட்டயபுரம் அருகே கல்லூரி மாணவி தூக்கு போட்டு தற்கொலை
எட்டயபுரம் அருகே கல்லூரி மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
எட்டயபுரம்:
எட்டயபுரம் அருகே கல்லூரி மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
கல்லூரி மாணவி
எட்டயபுரம் அருகே உள்ள இளம்புவனம் செட்டியார் தெருவை சேர்ந்த சிவசுப்பிரமணியன் மகள் முத்தம்மாள் (வயது 19). இவர் கோவில்பட்டியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் வனிகவியல் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் கல்லூரிக்கு சென்று விட்டு திரும்பி வந்தவர் சோகமாக காணப்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் வீட்டில் மாடிக்கு சென்ற முத்தம்மாள் நீண்டநேரமாக கீழே இறங்கி வராததால், பெற்றோர் மாடிக்கு சென்றுள்ளனர்.
தூக்கு போட்டு தற்கொலை
அங்குள்ள அறை மின்விசிறியில் துப்பட்டாவால் அவர் தூக்கு போட்டு தொங்கிய நிலையில் இருந்துள்ளார். பதறிப்போன பெற்றோர் எட்டயபுரம் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதன்பேரில் எட்டயபுரம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் முத்து விஜயன் மற்றும் போலீசார் சம்பவ வீட்டிற்கு விரைந்து சென்று முத்தம்மாளின் உடலை மீட்டு எட்டயபுரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் விசாரணை
மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கல்லூரி மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.