தேவதானப்பட்டி அருகேலாரியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி சாவு
தேவதானப்பட்டி அருகே லாரியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலியானார்
தேவதானப்பட்டி அருகே உள்ள கெங்குவார்பட்டியில் இருந்து சிமெண்டு சிலாப்புகளை ஏற்றிக்கொண்டு கொடைக்கானலுக்கு நேற்று முன்தினம் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. லாரியை தேவதானப்பட்டியை சேர்ந்த முத்துபிரகாஷ் என்பவர் ஓட்டி சென்றார். அவருக்கு அருகில் கெங்குவார்பட்டி ஸ்ரீ ராம் நகரை சேர்ந்த கூலித்தொழிலாளியான குணசேகர் (வயது 30) என்பவர் அமர்ந்திருந்தார்.
வத்தலக்குண்டு-கொடைக்கானல் மலைப்பாதையில் டம் டம் பாறை அருகே சென்றபோது சாலையின் வளைவில் லாரியை வேகமாக திருப்பியதால் குணசேகரன் லாரியின் கதவில் சாய்ந்தார். அப்ேபாது திடீரென கதவு திறந்ததால் அவர் லாரியில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தேவதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.