தேவதானப்பட்டி அருகேகாரில் கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது
தேவதானப்பட்டி அருேக காரில் கஞ்சா வைத்திருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தேவதானப்பட்டி அருகே உள்ள காமக்காப்பட்டி சோதனை சாவடியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை மறித்து சோதனை செய்தனர். அதில் காரில் வந்தவரிடம் கஞ்சா பொட்டலம் ஒன்று இருந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார் காரில் வந்தவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் திருச்சியை சேர்ந்த அஜய் ரூபன் (வயது 25) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.