கூடலூர் அருகேபால் வியாபாரி வீட்டில் நகை-பணம் திருட்டு
கூடலூர் அருகே பால் வியாபாரி வீட்டில் நகை-பணம் திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.;
கூடலூர் அருகே உள்ள கருநாக்கமுத்தன்பட்டி கள்ளர் பள்ளி தெருவை சேர்ந்தவர் மாயத்தேவன் (வயது 48). பால் வியாபாரி. கடந்த 18-ந்தேதி இவர், வீட்டின் வெளிக்கதவை தாழ்ப்பாள் போட்டுவிட்டு நாட்டார் மங்கலம் பகுதியில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு குடும்பத்துடன் சென்று விட்டார். நேற்று முன்தினம் அவர்கள் குடும்பத்துடன் திரும்பி வந்தனர். பின்னர் மாயத்தேவனின் மனைவி வனிதா, பால் விற்ற பணத்தை வீட்டில் உள்ள பீரோவில் வைக்க சென்றார்.
அப்போது பீரோவில் லாக்கர் உடைந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து லாக்கரை திறந்து பார்த்தபோது அதில் இருந்த ரூ.47 ஆயிரம் மதிப்புள்ள நகைகள் மற்றும் ரூ.45 ஆயிரம் திருடுபோய் இருந்தது. இதுகுறித்து மாயத்தேவன் கூடலூர் வடக்கு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை-பணத்தை திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.