கூடலூர் அருகேபுகையிலை பொருட்கள் விற்ற பெண் மீது வழக்கு
கூடலூர் அருகே புகையிலை பொருட்கள் விற்ற பெண் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
கூடலூர் வடக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகேஸ்வரன் தலைமையில் போலீசார் கருநாக்கமுத்தன்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த சந்திரா (வயது 65) என்பவரது கடையில் போலீசார் சோதனை நடத்தினர். அதில் கடையில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்த 33 பாக்கெட்டுகள் புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.