கூடலூர் அருகேதோட்டத்தில் வாழைத்தார் திருடிய 3 பேர் கைது
கூடலூர் அருகே தோட்டத்தில் வாழைத்தார் திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
கூடலூர் ஜோத்து கவுடர் தெருவை சேர்ந்தவர் சேகர். விவசாயி. இவருக்கு கூடலூர் மந்தை வாய்க்கால் பாலம் அருகே வாழைத்தோட்டம் உள்ளது. இந்த வாழைத்தோட்டத்தில் அடிக்கடி வாழைத்தார்கள் திருடு போவதாக கூடலூர் தெற்கு போலீசில் சேகர் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வாழைத்தார்களை திருடிய மர்ம நபர்களை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் சேகர் தோட்டத்திற்கு சென்றார். அப்போது 3 பேர் வாழைத்தார்களை வெட்டி தலையில் சுமந்து வந்தனர். அவர்களை சேகர் மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தார். போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள், கூடலூர் எம்.ஜி.ஆர். காலனியை சேர்ந்த ஜெயக்குமார் (வயது 27), விஷ்வா (18), பவுன்ராஜ் (29) என்பதும், வாழைத்தார்களை திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் வழக்குப்பதிந்து 3 பேரையும் கைது செய்தார்.