சின்னசேலம் அருகே மோட்டார் சைக்கிள் திருட்டு
சின்னசேலம் அருகே மோட்டார் சைக்கிள் திருடியது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சின்னசேலம்,
சின்னசேலம் அருகே உள்ள தெங்கியாநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன் மகன் சிவராமன் (வயது 37). இவர் கனியாமூரில் உள்ள தனியார் கல்லூரியில் உடற்கல்வி இயக்குனராக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று சிவராமன், கனியாமூர் நான்கு முனை சந்திப்பில் உள்ள டீக்கடை அருகே தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு வெளியூர் சென்றார். பின்னர் மறுநாள் வந்து பார்த்தபோது, மோட்டார் சைக்கிளை காணவில்லை. அதை யாரோ மர்மநபர் திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் சின்னசேலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.