சின்னமனூர் அருகேசட்ட விழிப்புணர்வு பயிற்சி முகாம்
சின்னமனூர் அருகே சட்ட விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடந்தது.;
சாமானியனுக்கு நீதி பத்து ரூபாய் இயக்கம் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் மேம்பாட்டு அமைப்பு சார்பில், இலவச சட்டம் மற்றும் தகவல் உரிமை விழிப்புணர்வு பயிற்சி முகாம், சின்னமனூர் அருகே கரிச்சிப்பட்டியில் உள்ள கவின் வாழைநார் தொழிற்சாலையில் நடந்தது. முகாமை பத்து ரூபாய் இயக்க மாநில பொதுச் செயலாளர் நல்வினை விஸ்வராஜூ, துணைப் பொதுச் செயலாளர் வீரபாண்டியன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். மாவட்ட அமைப்பாளர் ஜமீன் பிரபு வரவேற்று பேசினார்.
முகாமில், பொதுமக்கள் அரசின் திட்ட செயல்பாடுகளை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் எவ்வாறு பெறுவது, அதன் மூலம் நாம் பெறும் பயன்கள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. இதில் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.