சின்னமனூர் அருகேகடையின் பூட்டை உடைத்து திருட்டு :2 பேர் கைது
சின்னமனூர் அருகே கடையின் பூட்டை உடைத்து திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
சின்னமனூர் அருகே உள்ள எரசக்கநாயக்கனூர் காளியம்மன் கோவில் வடக்கு தெருவை சேர்ந்தவர் கருப்பையா (வயது 39). இவர், அங்குள்ள பூசாணம் பட்டி சாலையில் பெட்டி கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு இவர், கடையை பூட்டிவிட்டு சென்றார். நேற்று காலை அவர் கடையை திறக்க வந்தார். அப்போது கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார்.
அப்போது அங்கிருந்த பீடி, சிகரெட் பண்டல்கள், ரூ.1,000 திருடுபோய் இருந்தது. இதுகுறித்து கருப்பையா சின்னமனூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் கடையில் திருடியது, அதே பகுதியை சேர்ந்த செல்வம் (25), பிரகாஷ் (23) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.