சின்னாளப்பட்டி அருகே பா.ஜ.க. பேனர் கிழிக்கப்பட்டதால் பரபரப்பு
சின்னாளப்பட்டி அருகே பா.ஜ.க. பேனர் கிழிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சின்னாளப்பட்டி அருகே பிள்ளையார்நத்தம் கிராமம் உள்ளது. இங்கு கோவில் திருவிழா நடைபெறுகிறது. திருவிழாவையொட்டி கோவில் முன்பு பா.ஜ.க. சார்பில் கட்சி உறுப்பினர்கள் புகைப்படத்துடன் வரவேற்பு பேனர் வைக்கப்பட்டது. இந்த பேனரில் அண்ணாமலையார் மில்ஸ் காலனி பகுதியை சேர்ந்த பிரபாகரன் என்பவரின் படமும் இடம்பெற்று இருந்தது. இந்நிலையில் நேற்று காலை பாா்த்தபோது பேனரில் இருந்த பிரபாகரன் படம் கிழிக்்கப்பட்டு இருந்தது.
இதுகுறித்து சின்னாளப்பட்டி போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் சிலர் பேனரை கிழித்தது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் பேனரை கிழித்த மர்ம நபர்களை தேடி வருவதுடன், அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர் இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.