சென்னிமலை அருகே பாதிரியார் குடும்பத்தை தாக்கியவர்களை கைது செய்யவேண்டும் கிறிஸ்தவ முன்னணி இயக்கத்தினர் புகார் மனு
சென்னிமலை அருகே பாதிரியார் குடும்பத்தை தாக்கியவர்களை கைது செய்யவேண்டும் என கிறிஸ்தவ முன்னணி இயக்கத்தினர் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனா்.
கிறிஸ்தவ முன்னணி இயக்கம் சார்பில் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று புகார் மனு கொடுக்கப்பட்டது. அந்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:-
சென்னிமலை அருகே தாசன்காட்டுப்புதூரில் பாதிரியார் கே.அர்ஜூனன் என்கிற ஜான் பீட்டர் (வயது 62) என்பவர் தனது குடும்பத்துடன் தனக்கு சொந்தமான இடத்தில் ஆராதனை செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சிலர் அத்துமீறி உள்ளே நுழைந்து, இங்கே ஆராதானை நடத்தக்கூடாது என்று கூறி அவர்களை சரமாரியாக தாக்கினர். பெண் என்றும் பாராமல் அவர்கள் மீது கொடூரமான தாக்குதலில் ஈடுபட்டு உள்ளனர். இதுகுறித்து சென்னிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். ஆனால் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை. எனவே அவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.