கேர்மாளம் அருகே தோட்டத்துக்குள் புகுந்து யானை அட்டகாசம்
தோட்டத்துக்குள் புகுந்த யானை
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட ேகர்மாளம் வனச்சரகத்துக்கு உள்பட்ட காடட்டி கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 38). இவர் தன்னுடைய 2 ஏக்கர் தோட்டத்தில் தென்னை சாகுபடி செய்து உள்ளார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கேர்மாளம் வனப்பகுதியில் இருந்து யானை ஒன்று சீனிவாசன் தோட்டத்துக்குள் புகுந்தது. பின்னர் அந்த யானை அங்கு பயிரிடப்பட்டிருந்த தென்னை மரக்கன்றுகளை பிடுங்கி தின்றும், மிதித்தும் சேதப்படுத்தின. நேற்று காலையில் தோட்டத்துக்கு வந்தபோது யானையால் ெதன்னைகள் சேதப்படுத்தப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். யானை அட்டகாசம் செய்ததில் 30 தென்னை மரக்கன்றுகள் சேதமாகி இருந்தது.