ஆங்கில புத்தாண்டையொட்டி, பசுமை பங்காளர் குழுவினர் மற்றும் தன்னார்வலர்கள் சார்பில் போடி அருகே மரக்கன்று நடும் விழா நடந்தது. விழாவிற்கு தன்னார்வலர் பனைமுருகன் தலைமை தாங்கினார். பின்னர் பரமசிவன் மலை கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் நாவல், ஆலமரம், மலைவேம்பு மற்றும் பூவரசம் உள்ளிட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன.