போடி அருகேமக்கள் தொடர்பு முகாம்:14-ந்தேதி நடக்கிறது

போடி அருகே மக்கள் தொடர்பு முகாம் வருகிற 14-ந்தேதி நடைபெறுகிறது.

Update: 2023-06-10 18:45 GMT

தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

போடி தாலுகா, ராசிங்காபுரம் அருகே அம்மாபட்டி வருவாய் கிராமத்துக்கு உட்பட்ட சில்லமரத்துப்பட்டி கிராமத்தில் வருகிற 14-ந்தேதி (புதன்கிழமை) காலை 10 மணி அளவில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெறுகிறது. இதற்கு மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தலைமை தாங்குகிறார். இந்த முகாமில். போடி தாலுகாவை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களின் கோரிக்கைகள், அரசு நலத்திட்டங்கள் தொடர்பான மனுக்களை கொடுத்து பயன்பெறலாம். இந்த தகவல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்