போடி அருகே மோட்டார் சைக்கிள் மோதி சிறுமி படுகாயம்
போடி அருகே மோட்டார்சைக்கிள் மோதிய விபத்தில் சிறுமி படுகாயம் அடைந்தார்.
போடி அருகே உள்ள ராசிங்காபுரம் கிராமத்தைச் சேர்ந்த தேவகி மகள் தான்யா ஸ்ரீ (வயது 11). நேற்று முன்தினம் மாலை இவர், அந்த பகுதியில் உள்ள கடைக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார்சைக்கிள் அவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த சிறுமி சிகிச்சைக்காக போடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போடி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.