போடி அருகே குடும்ப தகராறில் மோதல்; 4 பேர் படுகாயம்

போடி அருகே குடும்ப தகராறில் ஏற்பட்ட மோதலில் 4 பேர் படுகாயம் அடைந்தனர்;

Update: 2022-07-07 17:33 GMT

போடி அருகே உள்ள மேலசொக்கநாதபுரம் காந்திஜி காலனியை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 52). இவரது தம்பி முத்துராமன் (48). இவர்கள் இருவருக்கும் இடையே சொத்து பிரச்சினை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று இரவு சீனிவாசன் வீட்டிற்கு முத்துராமன் மனைவி முருகம்மாள், மகன் சதீஷ் குமார், சுரேஷ் ஆகியோர் வந்தனர்.

அப்போது சீனிவாசன் குடும்பத்திற்கும் அவர்கள் 3 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் சீனிவாசன், அவரது மனைவி பஞ்சவர்ணம், மகன் முத்துகுமார், முருகம்மாள் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் போடி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்