போடி அருகேகோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு:வாலிபர் கைது

போடி அருகே கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-01-03 18:45 GMT

போடி அருகே உள்ள தர்மத்துபட்டியில் ஸ்ரீ சிக்குவீரம்மாள் கோவில் உள்ளது. நேற்று காலை வழக்கம் போல் பூசாரி கோவிலை திறக்க வந்தார். அப்போது கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பூசாரி உள்ளே சென்று பார்த்தபோது உண்டில் உடைக்கப்பட்டு அதில் இருந்த பணம் திருடுபோய் இருந்தது. இதுகுறித்து போடி தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் உண்டியலை உடைத்து பணத்தை திருடியது, தர்மத்துபட்டி கிராமத்தை சேர்ந்த துரைப்பாண்டி (வயது 22) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்