பவானிசாகர் அருகேமின்சாரம் தாக்கி விவசாயி பலி
பவானிசாகர் அருகே மின்சாரம் தாக்கி விவசாயி பலியானாா்.
பவானிசாகர்
பவானிசாகர் அருகே உள்ள ஓலக்காரன்பாளையத்தை சேர்ந்தவர் சவுந்தரராஜன் (வயது 43). விவசாயி. இவர் நேற்று காலை தனது தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தார். அப்போது மின்சாரம் தடைபட்டது. இதனால் அவர் தோட்டத்துக்கு அருகே உள்ள டிரான்ஸ்பார்மரில் பியூஸ் போயிருக்கும் என கருதி அதில் ஏறியுள்ளார். இதில் எதிர்பாராதவிதமாக டிரான்ஸ்பார்மரில் உள்ள மின் கம்பியில் இருந்து மின்சாரம் பாய்ந்ததில் சவுந்தரராஜன் தூக்கி வீசப்பட்டார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு சென்று அவரை மீட்டு் சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சவுந்தரராஜன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பவானிசாகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இறந்த சவுந்தரராஜனுக்கு உமா என்ற மனைவியும், தருண் (7) என்ற மகனும் உள்ளனர்.