பங்களாப்புதூர் அருகே வைக்கோல் போர் தீப்பிடித்து எரிந்தது

பங்களாப்புதூர் அருகே வைக்கப்பட்டு இருந்த வைக்கோல் போர் தீப்பிடித்து எரிந்தது

Update: 2023-08-07 22:16 GMT

பங்களாப்புதூர் அருகே உள்ள புஞ்சைதுறையம்பாளையத்தை சேர்ந்தவர் குமார். இவர் தோட்டத்தில் வைக்கோல் போர் வைத்திருந்தார். அதில் நேற்று மதியம் திடீரென தீப்பற்றிக்கொண்டது. சிறிது நேரத்தில் தீ மளமளவென கொழுந்துவிட்டு எரிந்தது. இதுகுறித்து குமார் உடனே கோபி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். எனினும் வைக்கோல்போர் முழுவதும் எரிந்து நாசமானது.

இதுகுறித்து பங்களாப்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வைக்கோல் போரின் அருகே குப்பையில்  வைக்கப்பட்ட தீ அருகே உள்ள வைக்கோல்போாில் பற்றிக்கொண்டதாக போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்