ஆசனூர் அருகே பள்ளத்தில் பாய்ந்த கார்

ஆசனூர் அருகே பள்ளத்தில் கார் பாய்ந்தது.

Update: 2023-10-09 23:59 GMT

தாளவாடி

சேலம் மாவட்டம் தாரமங்கலத்தைச் சேர்ந்தவர்கள் மதியழகன் (வயது 47), ராமச்சந்திரன் (36) மற்றும் ஓமலூரை சேர்ந்த மணிகண்டன் (42), இந்திரன் (50). இவர்கள் 4 பேரும் கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகரத்தில் தேங்காய் பறிக்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இந்த நிலையில் 4 பேரும் நேற்று மாலை சாம்ராஜ் நகரில் இருந்து தாரமங்கலத்துக்கு காரில் சென்று கொண்டிருந்தனர். காஞ்சிக்கோவிலைச் சேர்ந்த செல்வராஜ் (36) என்பவர் காரை ஓட்டினார். ஆசனூர் செம்மண் திட்டு அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த கார் ரோட்டோரம் இருந்த 20 அடி பள்ளத்தில் பாய்ந்தது. இதில் காரின் இடிபாடுகளுக்குள் சிக்கி 5 பேரும் காயம் அடைந்தனர். இதை பார்த்த அந்த வழியாக வந்தவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆசனூர் அரசு துணை சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்றனர். இதுகுறித்து ஆசனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்