ஆண்டிப்பட்டி அருகே ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு: கதறி அழுத பொதுமக்கள்

ஆண்டிப்பட்டி அருகே ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

Update: 2022-12-20 18:45 GMT

ஆண்டிப்பட்டி அருகே பிச்சம்பட்டி கிராமத்தில் பயணிகள் நிழற்குடை கட்ட சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து ரூ.7 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்காக பிச்சம்பட்டி சாலையில் இடம் தேர்வு செய்யப்பட்டது. அந்த இடத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்து கடைகள் கட்டியிருப்பதாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து ஆக்கிரமிப்புகளை அகற்றும் படி அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நேற்று நடந்தது.

அப்போது ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றுவதற்கு அதன் உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் வியாபாரிகள் உறவினர்கள் கதறி அழுதனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் உருவானது. பின்னர் பாதுகாப்புக்காக 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். இதையடுத்து பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. பயணிகள் நிழற்குடை கட்ட தேவையான இடம் மீட்கப்பட்டதால் கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்