ஆண்டிப்பட்டி அருகே காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

ஆண்டிப்பட்டி அருகே காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.

Update: 2023-02-26 18:45 GMT

ஆண்டிப்பட்டி அருகே லட்சுமிபுரம் கிராமத்தில் பழமை வாய்ந்த காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி கணபதி ேஹாமம், 4 கால யாகசாலை பூஜை நடைபெற்றது. இதையடுத்து பல்வேறு 108 புனித தலங்களில் இருந்து புனித நீர் எடுத்து வரப்பட்டது. பின்னர் யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடாகி கோவில் கோபுர விமானத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க ஆகமவிதிப்படி கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது 2 கருடன்கள் கோவில் மேல், வானத்தில் வட்டமிட்டதால் அதனை பார்த்த பக்தர்கள் பக்தி பரவசமடைந்தனர்.

இதையடுத்து கோவில் வளாகத்தில் கூடியிருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. பின்னர் அன்னதானம் நடைபெற்றது. விழாவில் ஆண்டிப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் கலந்துகொண்டனர். கும்பாபிஷேகத்தையொட்டி 3 நாட்கள் கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவின்போது அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்